இதுவரை நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி, ஆங்கிலம் என நடித்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து அனைத்து மொழிகளிலும் ஆல்ரவுண்டராக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்
தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் படத்திற்கு வாத்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் மிகப்பெரிய தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளாராம். இதுகுறித்து சம்யுக்தா அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இது மிகவும் சிறப்பான ஒன்று. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் மிக திறமையான நடிகர் தனுஷுன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும் வாத்தி படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முந்தைய படத்திலும் சம்யுக்தா மேனன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளன. இதுதவிர புதிதாக நிறைய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். தொடர்ந்து கைவசம் ஏராளமான படங்களை வைத்து மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.