தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் 17 மொழிகளில் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்று முன் இந்த திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இந்த படம் வெளியாக உள்ள மொழிகள் பின்வருமாறு: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பொலிஷ், போர்த்துகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது