Entertainment
‘மாரி 2’ படப்பிடிப்பில் தனுஷ் காயம்: படப்பிடிப்பு நிறுத்தம்
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60% முடிந்துவிட்ட நிலையில் நேற்று சென்னை அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதில் தனுஷ் மற்றும் வில்லன் டோவினோ தாமஸ் ஆகியோர் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் படமாக்கியபோது திடீரென தனுஷ் கீழே விழுந்ததால் அவரது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவரை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனுஷின் உடல் தேறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தனுஷூக்கு விபத்து ஏற்பட்ட தகவல் தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்னும் ஒருசில நாட்களில் தனுஷ் முழுமையாக குணமாகிவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
