Connect with us

எம்மாடியோ!! ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Dhanush

பொழுதுபோக்கு

எம்மாடியோ!! ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ‘தி கிரே மேன்’ படத்தை இயக்கியுள்ளனர்.

இதனிடையே கடந்த 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி இப்படம் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனுஷின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

இந்த சூழலில் ‘தி கிரே மேன்’ படத்திற்கு நடிகர் தனுஷ் அமெரிக்க டாலர்களில் 5 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.4 கோடி என கேட்ட ரசிகர்கள் திக்குமுக்காடியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top