எல்லைமீறிய தனுஷ் ரசிகர்கள்!! அரசு பேருந்தை மறித்து அட்ராசிட்டி..!!!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்‘நானே வருவேன்’.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் கூட்டணியில் உருவான இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

குறிப்பாக திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படமானது கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதோடு தனுஷ் இரட்டை வேடங்களில் ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் த்ரில்லரை வழங்கிய நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த சூழலில் நானே வருவேன் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதம் ஒருபகுதியாக மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் அரசு பேருந்தை நடுரோட்டில் மறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.