Connect with us

ரஜினி,விஜய் ,அஜித் எல்லாம் பின்னுக்கு தள்ளி சாதனையாளராக மாறிய தனுஷ் ! குவியும் பாராட்டுக்கள் !

dhanush 6

பொழுதுபோக்கு

ரஜினி,விஜய் ,அஜித் எல்லாம் பின்னுக்கு தள்ளி சாதனையாளராக மாறிய தனுஷ் ! குவியும் பாராட்டுக்கள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் வசூல் சாதனை புரிவது மட்டுமில்லாமல் படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

தனுஷ் தற்போழுது வாத்தி, நானே வருவேன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் திருச்சிற்றம்பலம் படம் இந்த மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

dhanush in thiruchitrambalam movie megam karukatha song making video 1658126846 1

அதை தொடர்ந்து அவரது அண்ணனும் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன் நடித்து வருகிறார், மேலும் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்பொழுது அவரது ட்விட்டர் அக்கவுண்டில் முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2010ல் ட்விட்டரில் அறிமுகமான தனுஷ் தற்பொழுது 11 மில்லியன் பாலோவர்களைப் பெற்று முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் என்ற சாதனையை வென்றுள்ளார்.

பைக் வேண்டாம் ஹெலிகாப்டரில் மாஸ் காட்டும் அஜித் ! வைரல் வீடியோ !

முதல் இடத்தை பிடித்த தமிழ் நடிகர் தனுஷ்!!… வைரல் தகவல்லால் ரசிகர்கள் உற்சாகம்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ள பட்டியலில் நடிகர் சூர்யா (8.1) மில்லியன், கமல்ஹாசன் (7.5) மில்லியன், சிவகார்த்திகேயன் (7.5) மில்லியன், ஜிவி பிரகாஷ் (6.4) மில்லியன், ரஜினிகாந்த் (6.2) மில்லியன், விஜய் (4) மில்லியன், ஜெயம் ரவி (3.8) மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

தனுஷின் ஒவ்வொரு படங்களின் வெற்றி அவரது ரசிகர்களால் கொண்டாட படுபவது போல அவரை ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top