அஜித்தை காப்பி அடித்த தனுஷ்! நானே வருவேன் படத்தின் கதை குறித்து மாஸ் அப்டேட்!

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படமான நானே வருவேன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், இது அவரது சகோதரரும் திரைப்பட தயாரிப்பாளருமான செல்வகரனால் இயக்கப்பட்டது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

naane varuven dhanush new avatar 1 1658958300 1661448053

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.சமீபத்தில் இந்த படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் ஆடியோ பாடல் வெளியிடப்பட்டது . இம்மாதம் 29ம் தேதி வெளியாகும் நானே வருவேன் படம் வெளியாகும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் காட்டுக்குள் வசிக்கும் வேடனாக ஒரு தனுசும், அந்த காட்டுக்கு ஒரு பணி நிமித்தமாக குடும்பத்துடன் செல்லும் என்ஜினீயராக ஒரு தனுசும் தோன்றுகிறார்கள். இருவருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய தொடர்போ, அல்லது பூர்வஜென்ம பந்தமோ இருப்பதாக டீசர் காட்டுகிறது.

1651299944Dhanush s Captain Miller director Arun Matheswaran shares breaking details about the film ogimg

டீசரை பார்த்தாலே இந்தப்படம் ‘வாலி’ பட பாணியில் உருவாகியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.அதிலும் இரட்டையர்கள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மாதிரியே இந்த படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

துருவ் விக்ரமின் ஆல்பத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி! மாஸ் காட்டும் காதல் பாடல் இதோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment