
பொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு ஆசைப்படும் தனுஷ் !! யாரு பா அந்த நடிகை ? .
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம்தேதியன்று வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
கொரோனா காரணமாக தனுஷ் நடித்த ‘கர்ணன்’, ‘மாறன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ ஆகிய 4 படங்களும் ஓடிடியில் வெளியானது அதை தொடர்ந்து சுமார் 3 ஆண்டுகளுக்குப்பிறகு ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கு முன்னதாக தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஜூலை 15-ம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளிலும்,நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ம்தேதி வெளியாகும்.இந்த படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளதாகவும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 5 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர். தனுஷ் நடித்த ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இப்படத்தில் இணைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது,உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது .அதற்கு அடுத்து செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் ,தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது .
இந்தப் படங்களை தொடர்ந்து தான் சத்யஜோதி தயாரிப்பில் ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
அண்ணாச்சி படத்தின் இசை வெளியிட்டு விழா!! வருகை தரும் ஹீரோயின் லிஸ்ட் .. யாருலா வராங்க தெரியுமா ??..
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படமான டாக்டர்,டான் போன்ற படத்தில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
