திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் படக்குழு! சென்சார் தகவல் இதோ !

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

download 33

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை பிரம்மாண்டமாக நடத்தபட்டது.இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொண்டனர்.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தை படக்குழுவினருடன் பார்த்துள்ளார் . மேலும் ரசிகர்களுக்கு இப்படத்தை காண்பிக்க தயாராக உள்ளதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் தெரவித்துள்ளார்.

மகேஷ் பாபுவின் திரையரங்கில் தளபதி விஜய் ! என்ன படம் பார்த்தார் தெரியுமா? வைரல் வீடியோ!

NTLRG 20220815115040811454

தற்போழுது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment