Entertainment
ஜெயம் ரவி மனைவியுடன் தகராறு செய்தாரா தனுஷ்? வைரல் புகைப்படம்!
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் நடிகர் தனுஷ் தகராறு செய்வது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து இரு தரப்பினருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி, தனுஷ், தனுஷ் மனைவி, த்ரிஷா உள்பட ஒரு சிலர் கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படத்தை தற்போது வேண்டுமென்றே வதந்தி கிளப்பும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் உண்மையில் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி குடும்பத்தினர்கள் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் அவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையே எந்த சண்டையும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த புகைப்படம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டு உள்ளது என்றும் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி மனைவிக்கும் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
