தனுஷ் ,அனிருத் இணையும் நேரலை நிகழ்ச்சி! சன் பிச்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போழுது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில் லைஃப் ஆஃப் பழம்’ என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது.

Dhanush and Anirudh

திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை திருச்சிற்றம்பலத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களான இருவரும் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ரஜ் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிருத் தனது இசைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.

dhanush anirudh12

தற்போழுது சன் பிச்சர்ஸ் ஒரு வீடியோ அப்டேடை வெளியிட்டுள்ளது அந்த வீடியோவில், ‘ 2012ஆம் ஆண்டு 20 வயதில் என்னால் ஒரு படத்திற்கு இசை அமைக்க முடியுமா என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது. அதற்கு காரணம் தனுஷ் தான் .

இப்போ 7 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வர்றோம், லைட் ஹார்ட்டோட. ஜாலியாக சந்தோஷமாக வர்றோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment