
பொழுதுபோக்கு
தனுஷ் மற்றும் அனிருத் இணையும் நேரலை நிகழ்ச்சி! – பிறந்தநாள் ஸ்பெஷலா இருக்குமோ ?
தமிழ் சினிமாவில் மூன்று முறை தேசிய விருது பெற்ற தனுஷ்க்கு நாளை வியாழக்கிழமை ஜூலை 28 ஆம் தேதி தனது 39 வயது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது ரசிகர்களை போலவே அவர் அடுத்தடுத்து நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவியத்துடங்கியுள்ளது.
பிறந்த நாளின் சிறப்பாக அவர் நடிக்கும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் அப்டேட்களையும் ரசிகர்கள் விருந்தாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில் லைஃப் ஆஃப் பழம்’ என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
மேலும் இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்
இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் வாத்தி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெளியாகும் தி லெஜண்ட் படத்திற்கு இப்படியொரு அதிஷ்டமா? முதல் காட்சி எப்போ தெரியுமா?
தற்போழுது மேலும் கூடுதலாக சிறப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தான் அது. திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை திருச்சிற்றம்பலத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களான இருவரும் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
