தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் காட்டு தீயாய் பரவியதோடு பல வதந்திகளும் பேசப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முயற்ச்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் இந்த விஷயத்தில் எந்த ஒரு பயனும் இல்லாமல் போனது.
இதனையடுத்து, இருவரும் ஒன்றாக திருப்பதி கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்கு சென்றுவிட்டு வந்து மீண்டும் இணைந்து வாழ போகிறார்கள் என பயில்வான் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அவருடைய அம்மா லதா ரஜினிகாந்த் வாழ்க்கை பற்றிய சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
அதேபோல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் தனுஷுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருப்பதி கோயிலுக்கு போவதற்கு சம்மதித்து விட்டார்களாம்.
இவர்கள் திருப்பதி சென்று விட்டு வந்தால் இவர்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டு ஒற்றுமையாக வாழ முயற்சிப்பார்கள் என இரு குடும்பமும் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.