தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் 18 வருட இல்லற வாழ்கையில் இருந்து பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இத்தகைய அறிவிப்புக்கு சோசியல் மீடியாவில் பல கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்துவைக்க அவர்களுடைய பெற்றோர் பல்வேறு முயற்சிகள் எடுத்தப்போதிலும் பலனில்லாமல் போனது. இதன்காரணமாக ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மூத்த மகன் யாத்ரா பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றுள்ளார்.
அதை காண தான் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மேட்சிங் – மேட்சிங் உடையில் சென்றுள்ளனர். அப்போது எடுத்துள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.