தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவிப்பு- டுவிட்டரில் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
தனுஷ் திடீரென சினிமாவில் முன்னேறினார். சினிமாவில் இவரது வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. சினிமாவில் நடிக்க வந்த புதிதிலேயே இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணம் புரிந்தார்.
நடு நடுவில் இவரை பற்றி சில செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. ஐஸ்வர்யாவுக்கும் தனுஷ்க்கும் சண்டை என்றே அடிக்கடி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வந்தன.
இருப்பினும் இதை இவர்கள் பெரிய அளவில் மறுக்கவில்லை.
கடந்த 2004ம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் நடந்தது. இந்நிலையில் மிகப்பெரிய நட்சத்திர தம்பதிகளான இவர்கள் பிரிகிறோம் என முடிவெடுத்துள்ளனர்.
தனுஷ் இது பற்றி டுவிட்டரில் கூறி இருப்பதாவது, 18 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக வாழ்ந்து வந்தோம் என்றும், எங்களது பயணத்தில் நல்ல வளர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவை இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரிகிறோம் என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
???????????????????? pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
