Connect with us

வன்முறை நடந்த பள்ளியில் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு.!!

தமிழகம்

வன்முறை நடந்த பள்ளியில் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு.!!

இன்றைய தினம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏனென்றால் அங்கு படித்த 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

ஆயினும் பள்ளியின் தரப்பில் இருந்து எந்த ஒரு சரியான விளக்கமும் தரப்படவில்லை என்பதால் பொதுமக்கள் கொந்தளித்தனர். இதன் விளைவாக அங்குள்ள சுற்று கிராமவாசிகள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பள்ளியின் வகுப்பறைகளை அடித்து நொறுக்கி, பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் வன்முறை நடந்த பள்ளியில் டிஜிபி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

வன்முறை நடந்த கணியாமூர் பள்ளியில் உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி வளாகம், தீ வைக்கப்பட்ட வாகனங்கள் வகுப்பறைகளில் டிஜிபி உள்துறை செயலாளர் ஆய்வு செய்கின்றனர்.

பள்ளியில் பயின்ற மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top