கந்து வட்டிக்கு ஆப்பு… காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!

கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள ஆபரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வேற்று காகிதங்கள், சட்டவிரோத ஆவணங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment