பொறுமையை கையாண்ட காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!!
கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு வாகனத் தணிக்கை மூலம் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 13.01.2022 அன்று, சென்னை அண்ணாநகர் காவல் நிலைய எல்லையில் உதவி ஆய்வாளர் கேசவன், காவலர்களான அம்சவல்லி மற்றும் செல்வம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் வாகனத்தை நிறுத்து விசாரித்தனர்.
அதில் ஒருவர் கோபத்தை தூண்டும் விதத்தில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இருப்பினும் பொறுமையை இழக்காத காவலர்கள் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இதனை பாராட்டும் விதமாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
