குழந்தைகளின் கல்வி குறித்து பேசி பிரபலமான திருவள்ளூர் எஸ்ஐக்கு டிஜிபி பரிசு!

ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்த சப்-இன்ஸ்பெக்டர் எம்.பரமசிவத்தை தமிழ்நாடு டிஜிபி (காவல்துறை இயக்குநர்) சி சைலேந்திர பாபு நேரில் பாராட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் பதிவிட்டு எஸ்.ஐ.க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் தேர்வுக்கு மாணவர்கள் வரவில்லை என அரசு பள்ளி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், தனது எல்லைக்குட்பட்ட கிராமத்திற்கு சென்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் கல்வித்துறை ஊழியர்களுடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். தற்போது வைரலாகியுள்ள அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு உதவி தேவைப்பட்டால் தனிப்பட்ட முறையில் தன்னை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பள்ளிக் கட்டணம், உணவு அல்லது வீட்டுப் புகார் எதுவாக இருந்தாலும், நீங்கள் காவல் நிலையத்தில் என்னை அணுகலாம்” என்று பரமசிவம் கிராமத்தில் உள்ள பெண்களிடம் கூறினார். “எனக்கு ஒரே ஒரு உதவியை மட்டும் செய்யுங்கள். இந்தக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். அவர்கள் வளர்ந்து, அடிப்படை உண்மைகளை உணர்ந்து, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாத உங்களிடம் (பெற்றோர்கள்) சில கடினமான கேள்விகளை முன்வைக்கப் போகிறார்கள்,” என்று பரமசிவம் கூறினார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியீடு!

குழந்தைக் கல்வியை ஊக்குவிக்கும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிய காவல்துறை அதிகாரி, குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் பள்ளியில் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நல்ல செயலுக்காக சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்துக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ரொக்கப் பரிசையும் டிஜிபி வழங்கினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.