எதிர்பாராத ட்விஸ்ட்… இந்த இரண்டு பேரும் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை!

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அரசின் முக்கிய அதிகாரிகள் இருவரும் புறக்கணித்துள்ளனர்.

ஆளுநர் நீட் உள்ளிட்ட அரசின் சட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளும் கட்சியான திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று மாலை தேநீர் விருந்து நடைபெற்றது.

அதில், மத்திய இணையமைச்சர் எல் .முருகன், அதிமுக, பாஜக, பாமக, தமாகா கட்சியை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன. அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி,வேலுமணி,விஜயபாஸ்கர்,தளவாய் சுந்தரம் ஆகியோரும் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை , நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே வாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாரதியார் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி முதலாவதாக பாரதியார் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி,பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் ஆளுநர் தனித்தனியாக சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசின் முக்கிய பதவிகளை வகிக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.