நாளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! ஷாக் கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம்

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொங்கல் தினத்தில் கூட மக்களால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. அதேவேளையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி கிடையாது என்று அடுத்தடுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

அதன் வரிசையாக தற்போது மற்றொரு பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆண்டாள் கோவிலில் நாளை காலை 07:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஒட்டி கோவில் நிர்வாகம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது. காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியேற அனுமதி வழங்கியும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment