அந்தரத்தில் பறந்த நபர்: ஆடிப்போன அம்மன் பக்தர்கள்!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

அதன் படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அக்ரா பாளையம் கிராமத்தில் கங்கையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் கங்கை அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குறிப்பாக தீமிதித்தல், தீச்சட்டி எடுத்தல், அளவு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்திய நிலையில் இரண்டு பக்தர்கள் அந்தரத்தில் பறந்த படி, கங்கை அம்மனுக்கு மாலை அணிவித்தனர்.

இத்தகைய செயலால் அம்மன் பக்தர்கள் ஆடிப்போய் திகைத்து நின்றனர். இதனையடுத்து  திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.