திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் அனுமதி இல்லை: கலெக்டர் அறிவிப்பால் அதிர்ச்சி

6bed730fdde4466ad958593adc1e031d

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு 10 நாட்கள் அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதால் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

திருச்செந்தூர் கோவிலில் விரைவில் ஆவணித்திருவிழா நடைபெற உள்ளது. இந்த நேரத்தின் போது அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு முருக பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் ஆவணித்திருவிழா பணியாளர்கள் மூலம் ஆகமவிதிப்படி நடைபெறும் என்றும் ஆட்சியர் செந்தில் ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment