ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி: தேவஸ்தானம் அதிரடி!!
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 4 நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்யும் டிக்கெட்டுகள் ஓராண்டுக்கு மேலாக நேரடியாக கவுண்டர்களில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்.15 தேதி முதல் தினமும் 10,000 டிக்கெட்டுக்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இலவச தரிசனம் செய்ய ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து திருப்பதிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் அடுத்தடுத்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. நேற்று வழங்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாக வரும் 24- ஆம் தேதி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் இதற்கு ஏற்றவாறு தயார்செய்யது கொள்ள தேவஸ்தானம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
