வடலூரில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தமிழகத்தில் வரிசையாக கோவிலில் தரிசனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக வேளாங்கண்ணியில் புத்தாண்டன்று மக்கள் கூடுவதற்கு அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். அதேபோல் கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மற்றுமொரு விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதியில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே” என்று பாடிய வள்ளலார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தார். சத்திய ஞான சபையை நிறுவியவர் என்ற பெருமைக்கும் உரியவர் வள்ளலார்.
தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு வடலூரில் நேரடியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி வடலூரில் வள்ளலார் கோவிலில் நாளை தைப்பூசத்தன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நிலையில் வள்ளலார் தெய்வீக யூடியூப் சேனலில் தரிசனங்களை பக்தர்கள் கண்டு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
