பிரதமர் மோடி வாரணாசி பயணம்: பல்வேறு திட்டங்கள் தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.`

வாரணாசியின் கர்கியாவோன் என்ற இடத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள பனாஸ் பால் பண்ணைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதியை பெற்றிருக்கும்.

மேலும் அப்பகுதியின் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், புதிய வேலை வாய்ப்பினால் விவசாயிகளுக்கும் உறுதுனையாக இருக்கும். பால் உற்பத்தியாளர்கள் ஆலைக்காக பயோ கேஸ்  அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்போருக்கு கிராமப்புற குடியிருப்பு உரிமை ஆவணங்களை பிரதமர் வழங்க உள்ளார்.

இரண்டு இடங்களில் உள்ள 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும்  திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இது வாரணாசிக்கான போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்.

மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைக்க உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment