தேவர் குருபூஜை! பசும்பொன்னுக்கு செல்லாத இபிஎஸ்!!

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக தரப்பில் இபிஎஸ் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க பழனிசாமி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தேவர் திருமனாக இருக்கக்கூடிய முத்துராமலிங்க ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் புதிய திருப்பம்! ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா!!

இதனை தொடர்ந்து கட்சியின் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இபிஎஸ் நேரடியாக தேவர் குருபூஜையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அவர் அங்கு செல்லாமல் நந்தனத்திற்கு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டும் பசும்பொன் செல்லாமல் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்பு!

மேலும். தற்போது நிலவி வரும் சூழலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவர் சிலைக்கு தங்க கவசத்தை அணிவிப்பது யார்? என்ற கேள்வி அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment