தேவர் தங்க கவசம் விவகாரம்: யாரிடம் ஒப்படைக்கப்படும்?

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி இருந்தார். இந்த சூழலில் தங்ககவசத்தின் பாதுகாப்பை கருதி தனியார் வங்கியில் பாதுகாத்து வந்தனர்.

அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் தேவர் பூஜையின்போது அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் தங்கக் கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பார்.

பின்னர் மீண்டும் பாதுகாப்புடன் கொண்டுவந்து வங்கியில் வைப்பார். இதற்கிடையில் ஓபிஎஸ், இபிஎஸ்-யிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது.

இதன்காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பானது அதிமுகவினர் மத்தியில் எழுந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment