கூத்து ஆட வந்த பெண் சாமியான கதை- கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ளது தாழையூர் என்ற இடம்.இந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்.

மற்ற கோவில்களை போல அல்லாமல் இந்த கோவிலில் சனிக்கிழமையும் புதன்கிழமையும் மக்கள் கூட்டம் அதிகம் வரும்.

இந்த கோவில் வழக்கமான கோவில்களை போன்ற கோவில் அல்ல வித்தியாசமான கோவில் ஆகும்.

கண்ணகி போல மிக உக்ரம் வாய்ந்த பெண்ணின் கோவில்தான் இந்த முத்துப்பெரிய நாயகி அம்மனின் வரலாறு.

பெரிய நாயகிக்கு கூத்தாடுவதுதான் குலத்தொழில் அப்படி பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சிக்காக வந்த போது இயற்கை உபாதைக்காக பெரிய நாயகி ஒதுங்க சென்று விட்டு கொஞ்சம் தாமதமாக வந்தாராம். இதை பார்த்த அவரது அண்ணன் இவ்வளவு நேரம் எங்கு சென்றாய் யாருடன் சென்றாய் என தவறான வார்த்தைகளை விட்டு விட்டாராம்.

இதனால் கோபம் கொண்ட பெண்ணான பெரிய நாயகி உடனே அந்த இடத்திலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்டாள் என்பது மரபு வழியாக சொல்லப்படும் வரலாறு.

இந்த கோவில் அய்யனார் கோவில் இந்த கோவிலில் பத்தினிப்பெண்ணான பெரியநாயகி உயிரை மாய்த்து தெய்வமாக ஆகி விட்டாள். அதனால் அய்யனார் கோவிலாக இருந்தாலும் இங்கு அம்மனாக தங்கி விட்ட பெரியநாயகி பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த கோவிலான இந்த கோவிலுக்கு வரும் சுற்றுவட்டார பக்தர்கள் அதிகம்.

இந்த கோவிலுக்கு மாடுகள் நேர்ந்து விடுவது வழக்கம். கோவில் மாடுகள் அதிக அளவில் இந்த பகுதிகளில் இருக்கும். இந்த மாடுகள் இரவு நேரத்தில் வயற்காடுகளில் புகுந்து சேட்டைகள் செய்யுமாம்.

இதை பொறுக்க முடியாத சில ஊர்க்காரர்கள் மாடுகளை வலை வைத்து பிடித்திருக்கின்றனர். அது முதல் இதுவரை அந்த பகுதிகளில் போதிய விளைச்சலே இல்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இங்கு உள்ள அய்யனார் உசுலாவுடைய அய்யனார் என அழைக்கப்படுகிறார். இங்கு வீற்றிருக்கும் முத்துப்பெரிய நாயகி அம்மன் சிலை சந்தன மரத்தில் அமைந்திருக்கிறது. அதனால் அபிசேகம் இல்லை. சந்தன தண்ணீர் மட்டும் தெளிக்கப்படுகிறது.

நினைத்த காரியம் இங்கு சென்று வந்தால் நிறைவேறும்.இங்கு அய்யனார், இடும்பன், சப்தகன்னிமார்கள் உள்ளிட்ட எல்லா ஸ்வாமிகளின் தனி சன்னதி உள்ளது.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews