கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்

சினிமாவில் ஆரம்ப காலங்களில் முதலில் பாடல்கள் எழுதப்பட்டு அதன் அதற்கேற்றவாறு இசை அமைக்கப்படும். அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் காலங்களில் பாடலுக்கு மெட்டமைத்தும் மெட்டுக்களுக்குப் பாடலமைத்தும் பாடல்களை உருவாக்கினர்.

ஆனால் இளையராஜா வருகைக்குப் மெட்டுக்குப் பாடல் எழுதுவது நிரந்தரமாகிப் போனது. இன்று பாடல்கள் இயற்றி மெட்டமைப்பது என்பது அறவே கிடையாது. இசையமைப்பாளர் ஒரு டியூன் போட அதற்கு கவிஞர் அருகியே அமர்ந்து பாடல்கள் எழுதுவார். இப்படித்தான் சினிமாவில் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன.

சில நேரம் இசையமைப்பாளர்களே கவிஞர்களின் கற்பனையை இன்னும் விரிவாக்கும் வகையில் தனக்கு இதேபோல்தான் பாடல்கள் வேண்டும் என தீர்மானித்து டியூனுக்குரிய டம்மி வரிகளைப் போடுவர். ஆனால் அந்த வரிகளையே சில நேரங்களில் கவிஞர்கள் ஒத்துக்கொள்ள பாடல்கள் பிறக்கின்றன. அப்படித்தான் இசையமைப்பாளர் தேவா தான் இசையமைக்கும் பாடல்களுக்கு முதலிலேயே ஓரிரு வரிகளில் டம்மி வரியை எழுதி கவிஞர்களின் வேலையைக் குறைத்து விடுவாராம்.

1991-ல் ரமேஷ் அர்விந்த் நடிப்பில் வெளியான மரிக்கொழுந்து படத்திற்கு தேவா தான் இசை. இப்படத்தின் பாடல்களை வாலி இயற்றியிருந்தார். ஆனால் ஒரு பாடலுக்கான டியூனுக்கு மட்டும் வேறு பாடலாசிரியர் இயற்றியிருப்பார். தேவா இந்தப் பாட்டிற்கான மெட்டினை அமைத்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் சரியான வரிகள் புலப்படவில்லையாம்.

அப்பா முதலில் எனக்கு இந்தப் பெயர் தான் வைத்தார்… அவர் ஜாதி, மத பாகுபாடு பார்க்காதவர்… இளைய கேப்டன் சண்முகபாண்டியன் பகிர்வு…

அப்போது தேவாவே ஒரு டம்மி வரியை உருவாக்கி பாடல் வரிகள் வரவில்லை என்பதற்காக “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு.. என் காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு” என எதேயச்சையாக டம்மி வரிகளைப் போட அந்த வரிகள் இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் பிடித்துப் போக அதே வரிகள் பாடலாக உருப்பெற்றிருக்கிறது. இந்தப் பாடலை காமகோடியன் இயற்றியிருந்தார்.

அதேபோல் தான் அண்ணாமலை படத்தில் கொண்டையில் தாழ்ம்பூ பாடலுக்கு தேவா டம்மி வரிகளாக படத்தில் குஷ்புவின் கதாபாத்திரத்தின் பெயரை வைத்து நந்தினி நந்தினி வந்து நீ என்னை நீ கவனி.. என்று டம்மி வரிகளை எழுத அதற்கு வைரமுத்து குஷ்புவின் நிஜப் பெயரை வைத்து கொண்டையில் தாழம்பூ என்ற பாடலை இயற்றியிருக்கிறார். இவரின் இந்த ஸ்டைலை வைத்தே ஷான் ரோல்டன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...