Connect with us

தலைநகரம் சென்னையை முந்திய கோவை! இருந்தாலும் மக்கள் சோகம்;

News

தலைநகரம் சென்னையை முந்திய கோவை! இருந்தாலும் மக்கள் சோகம்;

5cf7006ac1fb18fa98b5e162018d88dd

தற்போது மக்களிடையே அதிகமாக பேசப்படும் நோய்க்கிருமி என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்தப்படி தமிழ்நாட்டு மக்களிடையே சாதாரணமான ஒரு வார்த்தையாக மாறியுள்ளது கொரோனா நோய். மேலும் சில வாரங்களாக நம் தமிழகத்தில் மீண்டும் இந்த கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக உயருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா  நோயானது அதிகமாக இருந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு மிகவும் கடுமையான நிலையில் நடைமுறையில் இருந்தது.3ef545ee4e059aa6ab5e3ce6e85f5fe0

அதனை தொடர்ந்து தற்போது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு தற்போது ஓரளவிற்கு தமிழகத்தில் ஊரடங்கு காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மாவட்ட ரீதியாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா  பாதிப்பின் எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரை தொடர்ந்து சென்னையில் 209 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஈரோட்டில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் ,சேலத்தில் 92 பேருக்கும், தஞ்சாவூரில் 97 பேருக்கும் இந்த கொரோனா  உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டங்கள் அடிப்படையில் தலைநகர் சென்னையை வீழ்த்தி முதல் இடத்திற்கு வந்துள்ளது கோயம்புத்தூர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top