தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் வேகம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஆயினும் இதில் மகிழ்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் தமிழ்நாட்டிலுள்ள முப்பத்தி நான்கு மாவட்டங்களில் கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை என்பது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.
அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனாவினால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், குமரி, கரூர், மயிலாடுதுறை, மதுரை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை.
நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று யாரும் கொரோனாவினால் உயிரிழக்கவில்லை. சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, திருப்பத்தூர், திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை. திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை.