தெலுங்கு தேச கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! சிசிடிவி காட்சி வெளியீடு!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தூணே நகர தெலுங்கு தேச பொருப்பாளராக இருப்பவர் சேசகிரி ராவ்.

இவரது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் கனக துர்கம்மா மாலை அணிவித்து அவரிடம் யாசகம் கேட்டதாக தெரிகிறது.

தாமதமின்றி ஊதியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

அப்போது யாசம் கொடுக்கும் போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டியுள்ளார். இதில் கை, மார்பு பகுதி வெட்டுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே அவரது அலறல் சத்தம் கேட்டவர்கள் சேசகிரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! எங்கெல்லாம் மழை?

தற்போது சம்பவம் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment