Connect with us

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர்; உக்ரைன்-இந்தியர்களை மீட்க கட்டுப்பாடுகள் நீக்கம்!

ukraine india

செய்திகள்

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர்; உக்ரைன்-இந்தியர்களை மீட்க கட்டுப்பாடுகள் நீக்கம்!

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர்; உக்ரைன்-இந்தியர்களை மீட்க கட்டுப்பாடுகள் நீக்கம்!

ரஷ்யா உக்ரைன் விவகாரம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துக் கொண்டு வருகிறது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா தனது படைகளை குவித்து கொண்டுவந்தது. இதனால் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்தது.

அதன் பின்னர் ரஷ்யாவுக்கு ஜி7 நாடுகள் அனைத்தும் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்றைய தினம் கூட இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பத் தகுந்த இடங்களில் டிக்கெட்டுகள் வாங்குமாறு அறிவித்திருந்தது,

இந்தநிலையில் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை மீட்க கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கொரோனா சூழலில் நாடுகளுக்கிடையே ஒரு நாளில் இயங்கும் விமானங்கள் எண்ணிக்கை குறித்து தற்காலிக உடன்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரியலாம் என கருதப்படுகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. உக்ரைன்-இந்தியா இடையே விமானங்கள் இயக்கத்துக்கு இருந்த கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப ஒரு நாளில் எத்தனை விமானங்களை உக்ரைன்-இந்தியா இடையே இயக்கிக் கொள்ளலாம் என்றும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தி விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top