லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் சிக்கிய போக்குவரத்து துறை துணை ஆணையர்!-உடனடி பணியிடை மாற்றம்;

தற்போது நம் தமிழகத்தில் அதிகளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் இடங்கள், வீடுகளில் அதிக அளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், வருமான வரி சோதனை அதிகமாக நடைபெற்று வருகிறது.

இவையெல்லாம் தாண்டி அரசு அலுவலகங்களிலும் கூட அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெறுகிறது. இதில் ஒரு சில அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போதே கையோடு சேர்த்துப் பிடிபடுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சிலர் டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் சிக்கிய போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடராஜரின் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment