திடீரென பாதை மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு ஆபத்து?

வங்க கடலில் தோன்றிய உள்ள தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி திரும்பி உள்ளதாகவும் இதனால் சென்னைக்கு மிக கனமழை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது

வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழு மண்டலமாக மாறி ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்பதால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்பதால் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment