வருகின்ற வியாழக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நவம்பர் 18ம் தேதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி வங்கக் கடலில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு,அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் நவம்பர் 18ம் தேதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா-வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் கூறியுள்ளது. இதன் விளைவாக நவம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த கனமழை தமிழ்நாட்டில் நீடிக்கும் என்றும் கூறியுள்ளது. அதன்படி நவம்பர் 19ம் தேதியில் அரியலூர், பெரம்பலூர்,திருச்சி,சேலம்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி திருவண்ணாமலை,வேலூர்,ராணிப்பேட்டை,தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.