Connect with us

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை!

Tamil Nadu

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை!

1cc847d271b1316458eb1d5a3b5497ef

 வங்க கடலில் திடீரென தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

மேலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்கக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top