வேகம் குறைந்தது; இன்று மாலை கரையைக் கடக்கும் தாழ்வு மண்டலம்!

குறைந்த காற்றழுத்த தாழ்வு

நேற்றைய தினம் தென் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்றுள்ளது.

chennai beach

இதனால் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நகரும் வேகம் இருபத்தி ஏழு கிலோ மீட்டரில் இருந்து இருபத்தி ஒரு கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது .

சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரியில் இருந்தும் கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print