வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதம் உயருமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தற்போது பலரும் வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் முறையை மறந்துவிட்டார்கள் என்று கூறலாம். ஏனென்றால் பல இடங்களில் ஏடிஎம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் upi பேமென்ட் மூலமாக மக்கள் பணப்பரிமாற்றம் செய்வதால் பெரும்பாலும் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர் இவை பல சிறு கடைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் வங்கிகளில் டெபாசிட் வட்டி விகிதம் உயரப்பட வாய்ப்புள்ளது போல் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருவிழா கால கடன் பட்டுவாடா அதிகரிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் வங்கிகளின் ரொக்க கையிருப்பு மிகவும் சரிந்தது.

வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகை 9.2% அதிகரித்துள்ள நிலையில் வழங்கி உள்ள கடனானது 16.4 சதவீதமாக காணப்படுகிறது. ரூபாய் மாற்று மதிப்பு சரிவை தடுக்க குறிப்பிடத்தக்க அளவு டாலர்களை ஆர்பிஐ விற்றாலும் சந்தையில் ரொக்கம் மிகவும் குறைந்தது.

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 90 ஆயிரம் கோடி என்ற கணக்கில் 10 நாள் சந்தையில் இருந்து ரொக்கத்தை உறிஞ்சுள்ளது. ரொக்க பற்றாக்குறையை சமாளிக்க திங்கள்கிழமை ரிசர்வ் வங்கி இடமிருந்து ரூபாய் 21,000 கோடி கடன் பெற்றுள்ளன வங்கிகள்.

ரொக்க பற்றாக்குறை சமாளிக்க பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை திரட்டுவதில் வங்கிகள் தீவிரம் காட்டிக் கொண்டு வருவதாகவும் தெரிகிறது. டெபாசிட் திருட்டும் இயக்கத்தை வங்கிகள் தொடங்கினால் வைப்புத் தொகை காண வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment