வைகை ஆற்றிலிருந்து அழகர்கோவில் நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர்..!! பக்தர்கள் மனம் உருக்கம்;
ஏப்ரல் 14ஆம் தேதி நம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் 16ம் தேதி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த நிகழ்வு நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இந்த நிலையில் தற்போது அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் பூப்பல்லக்கில் மதுரையிலிருந்து அழகர் கோவில் நோக்கி புறப்பட்டார். மதுரை வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் மனம் உருக வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
புதூர், மூன்றுமாவடி, சுந்தரராஜன் பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை அழகர்மலை செல்கிறார் அழகர். அழகர் கோயிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.
