Connect with us

கலப்பு திருமணம் செய்ததால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு!!!

women marriage age

தமிழகம்

கலப்பு திருமணம் செய்ததால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு!!!

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த அனைத்து கொடுமைகளும் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்தாலும் ஜாதி கொடுமைகள் என்னமோ தலைவிரித்து ஆடிக் கொண்டுதான் காணப்படுகிறது. ஏனென்றால் ஒரு சில இடங்களில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் கொலை செய்யும் அளவிற்கு உடன் பிறந்தவர்கள் உருமாறி உள்ளனர்.

அதையெல்லாம் தாண்டி கலப்பு திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு தள்ளி வைக்கும் முறையும் ஆங்காங்கே குக்கிராமங்களில் காணப்பட்டு தான் வருகிறது. இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று நல்லூர் கிராமம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் கலப்பு திருமணம் செய்து தம்பதிகளிடம் தலைகட்டு வரி வசூலிக்க ஹைகோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது.

நல்லூர் கிராமத்தில் கலப்பு திருமணம் செய்ததால் 25 குடும்பங்கள் கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது எதிர்த்து வேலூ என்பவர் ஹை கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

நல்லூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத முதல் ஞாயிற்று அன்று திருவிழா நடைபெறும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். கலப்பு திருமணம் செய்ததால் 25 குடும்பங்கள் திருவிழாவில் பங்கேற்க நல்லூர் கிராமத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கவும், தலைக்கட்டு வரி வசூலிக்கவும் உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் கலப்பு திருமணம் செய்த 25 குடும்பங்களையும் கிராமக்கோயில் விழாவில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொன்னமராவதி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார். கலப்பு திருமணம் செய்த 25 குடும்பங்களிடமும் தலைகட்டு வரி வசூலித்து கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top