மோசடி வழக்கு! தமிழகத்தைவிட்டு வெளியேற அனுமதி மறுப்பு!!

தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களில் பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

கடந்த அதிகமுக ஆட்சியில் ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் தன்மீதான மனுக்களை ரத்துசெய்ய வேண்டும் என அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனில் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் அரசியல் பிரமுகராக இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவித்தார்.

அதே போல் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் 2 முறை விசாரணைக்காக ஆஜரானதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் நிறுபிக்கப்பட உள்ளதால் சில நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தை தாண்டி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமைச்சர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.