
செய்திகள்
அதிகாரமற்ற நிலை, கல்வி வாய்ப்பும் மறுப்பு!- மெஹ்பூபா முஃப்தி வேதனை;
தனது சொந்த மாநிலத்திற்கு அதிகாரமற்ற நிலையினை மக்கள் உணர்வதாக முன்னாள் முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை அரசியல் பக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அனைத்து முறைகளையும் பயன்படுத்தி அதிகாரமற்ற நிலைக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் தள்ளப்படுகின்றனர் என்று முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பற்றி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் வேலைவாய்ப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மருத்துவமனைகள் உள்பட சிறிய, பெரிய ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளியாட்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.
பாதுகாப்பு படையினருக்கு எங்களது நிலங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்றும் மெஹ்பூபா முஃப்தி கூறினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் குழந்தைகளுக்கான பள்ளி, கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
நவீன கல்வியை குறைந்த கட்டணத்தில் மதர்சாக்கள் வழங்குகின்றன மற்றும் அவர்கள் ஆயுதப் பயிற்சி அளிக்கவில்லை என்றும் மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார். அரசு நிலத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்படுவது ஏன்? ஆசிரியர்களும் கல்வி பணியை விட்டு விலகுகின்றனர் என்றும் கூறினார்.
உதவிகள் இல்லாததால் ஆசிரியர்களும் குழந்தைகளின் கல்வியை விட்டு வெகு தூரம் செல்கின்றனர் என்றும் முன்னாள் முதலமைச்சர் மெக்பூபா முக்தி கூறியுள்ளார்.
