களத்தில் இறங்கிய மாணவர்கள்; நீட் தேர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்தியாவில் பல படிப்புகளுக்கு தற்போது நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நுழைவுத் தேர்வுகள் பலவும் மாணவர்களுக்கு பெரும் தொந்தரவாக காணப்படுகிறது.

நீட்

அதிலும் குறிப்பாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வினால் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு எதிராக பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு இருக்கையில் தற்போது மாணவர்களே போராட்டத்தில் குதித்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment