பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!

இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்திருந்தார். இதன் வாயிலாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலாக புதிய 2000 ,500 நோட்டுகள் அறிமுகப்படுத்தட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் சர்மா உள்ளிட்ட 58 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், பிஆர் கவாய், ஏஎஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியன் மற்றும் பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சிறையில் வெடித்த கலவரம்.. துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!

அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை 24 நேரம் செய்து முடிக்கப்பட்டது, இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு எதிரானது என்றும் மத்திய கழக உறுப்பினர்கள் , மத்திய அரசுக்கு தெரியாது என மனுதாரர் தரப்பில் பா.சிதம்பரம் தனது வாதங்களை முன்வைத்தார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கள்ள ரூபாய் நோட்டு, பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல் மற்றும் வரி ஏய்பு ஆகியவற்றிற்கு முடிவுக்கட்டும் நோக்கில் நன்கு ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் பரபரப்பு…. எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என தெரிவித்தனர். பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் நோட்டுகளை மாற்றிக்கொள்ள 52 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது போதாது என கூற முடியாது என்றும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.