நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த கோரிக்கை!: ஓபிஎஸ்-ஈபிஎஸ்;

பொதுவாக எதிர்க்கட்சி என்றால் சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை கடுமையாக கேள்வி கேட்பதும், மக்களுக்கு ஆளும் கட்சியிடம் இருந்து நலன்களை பெற்றுத் தருவதும் தலையாய கடமையாக செயல்படுவர்.

ஓபிஎஸ் ஈபிஎஸ்

 

அதனைப் போன்று நம் தமிழகத்தில் எதிர்கட்சியாக காணப்படுகிறது அதிமுக. இந்த நிலையில் எதிர்க் கட்சி சார்பில் தற்போது ஆளும் கட்சியிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளன. நெல், கரும்பு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

நெல்லுக்கு குவிண்டால் ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கான ஆதார விலையை ரூபாய் 4,000 ஆக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தவும் செய்துள்ளனர்.இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர்  ஸ்டாலின் செயல்பட்டால் பல நிலையங்களில் நெல் மூட்டைகள் மழை நீருக்கு சேதமாவது தவிர்க்கப்படும் என்பதும் அவர்களுக்கு ஆதார விலை அதிகமாக கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment