திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க கோரிக்கை – அன்புமணி

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்கக் கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், “திருவண்ணாமலை புவியியல் ரீதியாக தமிழ்நாட்டின் 2வது பெரிய மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் தொகை உள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ள இந்த மாவட்டத்தை தலா 4 தொகுதிகள் கொண்ட 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்.

+2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 5 மதிப்பெண்கள் – தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

மேலும், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், வேலூர் மாவட்டத்தை விட திருவண்ணாமலை மாவட்டம் பெரியது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் உள்ளது. அதேபோல், சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படும் என தெரிவித்துள்ளார் .”

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.