500 ரூபாய் நோட்டுக்கு தட்டுபாடா? மக்களே உஷார்…

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது.

செப்டம்பர் மாதம் இறுதி வரை மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. 

ரிசர்வ் பேங்க் எடுத்த இந்த முயற்சியை தொடர்ந்து பலரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவதால் 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரூ. 500 இன் தேவை நான்கு மடங்கு அதிகம் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை 20 சதவீதம் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.

ரூ.500 நோட்டு ஏற்கனவே தட்டுப்பாடாக உள்ள நிலையில் போலி நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. 

இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews