Connect with us

பீதியை கிளப்பும் ‘டெல்டாகிரான்’….!! இந்தியாவில் நான்காவது அலை ஜூன் மாதத்தில் ஏற்படலாம்;

deltacron

செய்திகள்

பீதியை கிளப்பும் ‘டெல்டாகிரான்’….!! இந்தியாவில் நான்காவது அலை ஜூன் மாதத்தில் ஏற்படலாம்;

பீதியை கிளப்பும் ‘டெல்டாகிரான்’….!! இந்தியாவில் நான்காவது அலை ஜூன் மாதத்தில் ஏற்படலாம்;

தற்போது தான் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைவாக காணப்படுகிறது.  இரண்டாவது கொரோனா அலையை விட மூன்றாவது கொரோனா அலை அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.

இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல திரும்ப பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் உலகின் நான்காவது அலை பரவி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு டெல்டாகிரான் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்டாகிரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 2022ஆம் ஆண்டு முதல் பிரான்சை டெல்டாகிரான் மிரட்டி வருகிறது.

டென்மார்க், நெதர்லாந்து நாடுகளிலும் அதிக வேகமாக டெல்டாகிரான் பரப்புவதாகவும் அறியப்படுகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் டெல்டாகிரான் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த டெல்டாகிரான் வைரஸ் விலங்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டாகிரானால் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.  ஆயினும் நம் இந்தியாவில் ஜூன் 2002 ஆம் ஆண்டு நாலாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐஐடி கான்பூர் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top